Sunday, 30 June 2013

Neram - Kadhal Ennulle song tamil Lyrics

Best Lyrics: Loved this song




காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோரோ
என் சுவாச அறையாகி யெனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ
(காதல்)

அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை
நான் போசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்

உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் யேதும் வந்தால் உன்னுள்ளே நானும் வந்தால்
மெதுவாய் சரியாய் அது போகாதா
(காதல்)

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
வாழும் நாட்களும் ஆயுல் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்

என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும்
உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப்போகும்
என் குனம் குனவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா
(காதல்)

என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோரோ
என் சுவாச அறையாகி யென்னை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ

No comments:

Post a Comment