Saturday, 6 July 2013

’ஜெயம்’ ரவி-த்ரிஷா ---பூலோகம்

’ஜெயம்’ ரவி-த்ரிஷா இணைந்து நடிக்கும் படம் ‘பூலோகம்’ மிகவும் பிரம்மாண்டமான படமாக தயாரித்து வருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

இந்தப் படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்காக ஹாலிவுட் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சொல்ல, இப்போது ஏழு அடி உயரமும், 150 கிலோ எடையும் கொண்ட, ஆங்கிலப் படத்தில் நடித்து வரும் நேதன் பிரீட்டன், ரவியுடன் மோதுகிறார்.

இதற்காக இவருக்கு பேசப்பட்ட சம்பளம் ஒன்றைக்கோடி. இதற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மூன்று கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய செட் அமைத்திருக்கிறார்கள்.

’இந்தப் படம் தன் சினிமா கேரியரில் மிகவும் முக்கிய படமாகவும், பிரம்மாண்டமான படமாகவும் இருக்கும்’ என்கிறார் ‘ஜெயம்’ ரவி. குத்துச் சண்டையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை என்பதால் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

No comments:

Post a Comment