Monday, 22 July 2013

வில்லன் விஷால்

ஒரே மாதிரி நடிக்க மாட்டேன். நல்ல கதையில் வில்லனாகவும் நடிப்பேன் என்றார் விஷால். பூபதி பாண்டியன் இயக் கத்தில் விஷால் நடித்துள்ள படம் பட்டத்து யானை. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஹீரோயின். படம் பற்றி டைரக்டர் பூபதி பாண்டியன் கூறும்போது, விஷால் நல்ல டான்ஸர். இப்படத்தை பொறுத்தவரை பாடல்கள் பெரும்பாலும் பின்னணி பாடல்களாக வருகிறது. ஆனாலும் விஷாலின் நடனத்தை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நடன இயக்குனர் ராஜு சுந்தரம் கூறினார். தல காலு புரியாத என்ற பாடலுக்கு வித்தியாசமான நடன அசைவுகளை ராஜு சுந்தரம் அமைத்தார். அதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எனக்கும் தோன்றியதால் நடன காட்சி படமாக்கப்பட்டது. விஷாலும் அவருடன் இணைந்து ஐஸ்வர் யாவும் போட்டிருக்கும் ஆட்டம் பேசப்படும் என்றார். விஷால் கூறும்போது, செல்லமே முதல் படத்தில் தொடங்கி ஹீரோவாகத்தான் நடிக்கிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்ட கதா பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். கதை பிடித்திருந் தால் வில்லனாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.


No comments:

Post a Comment