போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பைனலில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.இதில் முதலில் இலங்கை 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 203ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முத்தரப்பு கிரி்க்கெட் : மேற்கு இந்திய தீவில் இலங்கை,இந்தியா, மேற்கு இந்திய தீவு அணிகள் ஆகிய முன்று நாடுகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லீ்க் சுற்று ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின . இதில் டக்ஸ் வொர்த் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது. புள்ளிகளின் அடிப்படையில் மீ்ண்டும் இந்தியா - இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக தத்தளித்து கொண்டிருந்த நிலையில் அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி 52 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
Thanks to Dinamalar
No comments:
Post a Comment